தியாகதுருகம் அருகே அண்ணியை தாக்கிய வாலிபர் கைது

தியாகதுருகம் அருகே அண்ணியை தாக்கியதாக வாலிபர் கைது செய்யபட்டார்.;

Update: 2018-07-26 21:30 GMT

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகம் அருகே உள்ள கலையநல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி செவந்தா (வயது 36). விஜயகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று செவந்தாவுக்கும் விஜயகுமாரின் தாய் அய்யம்மாளுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த விஜயகுமாரின் தம்பி ராஜீவ்காந்தி, செவந்தாவை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து செவந்தாவின் தந்தை குப்பன்(75) தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்