முதல்மந்திரி பட்னாவிஸ் பதவி நீக்கம்? - சிவசேனா எம்.பி. பகீர் தகவல்
முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட இருப்பதாக சிவசேனா எம்.பி. பகீர் தகவலை தெரிவித்தார்.
மும்பை,
மராத்தா சமுதாய மக்கள் இடஒதுக்கீடு கேட்டு மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மும்பையில் நேற்று முழு அடைப்பு நடத்தினர்.
இந்த நிலையில் மராத்தா போராட்டத்தின் காரணமாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை பதவி நீக்கி விட்டு வேறு ஒருவருக்கு பதவி கொடுக்க இருப்பதாக சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத் எம்.பி. பகீர் தகவலை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மராத்தா சமுதாயத்தின் தற்போதைய போராட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை குறைகூறி வருகின்றன. மேலும் மாநிலத்தில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.
எனவே பா.ஜனதா தலைமை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீது வருத்தத்தில் உள்ளதாகவும், அவரை பதவியில் இருந்து மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களது கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் இறுதி முடிவை பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் தான் எடுப்பார்கள் என்று தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் சிவசேனா எம்.பி.யின் கருத்தை பா.ஜனதா தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதுகுறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் மாதவ் பண்டாரி கூறுகையில், “முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நன்றாக செயல்பட்டு வருகிறார். கட்சிக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை, இது சிவசேனா பரப்பியிருக்கும் வதந்தி ” என்றார்.