விவசாயிகளுக்கு விரைவு மின் இணைப்பு மேற்பார்வை பொறியாளர் தகவல்

விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் என்று விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-25 23:05 GMT
விழுப்புரம், 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் விரைவு (தட்கல்) விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பை பெறும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2½ லட்சம், 7.5 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.2¾ லட்சம், 10 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரைத்திறனுள்ள மின் மோட்டார்களுக்கு ரூ.4 லட்சம் வீதம் ஒருமுறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

எனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்திருப்பின் வருகிற 31-ந் தேதிக்குள் (செவ்வாய்க் கிழமை) இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற் பொறியாளர்களை அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்