அதிக வட்டி தருவதாக கூறி 700 பேரிடம் ரூ.40 கோடி மோசடி செய்த தம்பதி கைது

அதிக வட்டி தருவதாக கூறி 700 பேரிடம் ரூ.40 கோடி ேமாசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-25 22:49 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்தவர் நசீர் சேக். இவர் நிதி நிறுவனம் ஒன்றில் அதிக வட்டி கிடைப்பதாக கருதி பணத்தை முதலீடு செய்தார். 3 மாதம் கழித்து அவரது பணம் திருப்பி கிடைக்கவில்லை. மேலும் நிதி நிறுவனம் பூட்டப்பட்டு, அதன் நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீ சார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த 5 வருடமாக 700 பேரிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி ரூ.40 கோடி மோசடி செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 4 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர். மேலும் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான தம்பதி ரயிசா பூனாவாலா மற்றும் அவரது கணவர் முஸ்தபா தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அவர்களை தேடிவந்தனர்.

இந்தநிலையில் மும்பை புறநகர் பகுதிக்கு வந்த தம்பதியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.5 லட்சத்து 86 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்