தர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.;
தர்மபுரி,
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ்குமார், கிருஷ்ணன் தலைமை தாங்கினார்கள். மாவட்ட நிர்வாகி மணி மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். பி.எஸ்.என்.எல். செல்போன்கோபுரங்களை தனி நிறுவனமாக்கக்கூடாது. 1.1.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். நேரடி ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். 2-வது ஊதியக்குழுவில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.