ஆசிரியர் காலிபணியிடத்தை நிரப்பாததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம்
ஆசிரியர் காலி பணியிடத்தை நிரப்பாததை கண்டித்தும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
துவரங்குறிச்சி,
மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள தேனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தபள்ளியில் 156 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 6 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் ஒருஆசிரியர் பதவி உயர்வு பெற்று வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதால் 5 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு ஆசிரியையும் வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், 4 ஆசிரியர்கள் மட்டுமே தற்போது பணியாற்றி வருகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், ஆசிரியர் காலி பணியிடத்தை நிரப்பாததை கண்டித்தும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஆகியோர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் அவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது பெற்றோர் தரப்பில், உடனடியாக ஆசிரியரை நியமிக்காவிட்டால் தங்களது பிள்ளைகளின் மாற்றுச்சான்றிதழை தாருங்கள், வேறு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம் என்றனர். அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.