குண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டதால் பரபரப்பு “நிலநடுக்க பீதி வேண்டாம்” என கலெக்டர் அறிவிப்பு
கரூரில் குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்க பீதி வேண்டாம் என மாவட்ட கலெக்டர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
கரூர்,
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கரூர், தாந்தோன்றிமலை, சுக்காலியூர், வெள்ளியணை, காணியாளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 12 மணியளவில் குண்டு வெடித்தது போல் “டமார்” என பயங்கர சத்தம் கேட்டது. இதனால் வீட்டிலிருந்த பொதுமக்கள், அலுவலகத்தில் பணியில் இருந்தவர்கள் பயந்தனர். கரூர் கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு உள்ளிட்டவற்றில் பணியில் இருந்தவர்களும் வெளியே ஓடி வந்தனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பயங்கர சத்தத்திற்கான காரணம் என்ன? என்பதை அறிவதற்குள் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதாக பீதி கிளம்பியது. இதனால் ஆங்காங்கே தெருக்களில் பொதுமக்கள் கூடி நின்றனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் இருந்த கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி ஆகியோர் உடனடியாக காரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீடுகளில் விரிசலோ?, நிலத்தில் பிளவோ? எதுவும் ஏற்படவில்லை. அது வெறும் பீதி என்பது தெரிய வந்தது.
இதற்கிடையே வெள்ளியணை பகுதியில் விமானம் அல்லது ஹெலிகாப்டர் விழுந்து விட்டதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்றும் விசாரணை நடத்திய போது அதுவும் பீதி என்பது தெரிய வந்தது. இதன் பின்னரே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
இது தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று (நேற்று) மதியம் 12 மணி அளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் அது பீதி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படவில்லை என்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நிலநடுக்க பீதி அடைய தேவையில்லை. மேலும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளார்.