கர்ப்பிணிகளுக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும்
அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு அனைத்து விதமான பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் டாக்டர்களுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறைகளை சேர்ந்த டாக்டர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் மீரா (திருவண்ணாமலை), கோவிந்தன் (செய்யாறு), துணை இயக்குனர்கள் அன்பரசி (குடும்பநலம்), அசோக்குமார் (காசநோய்), கார்த்தி (தொழுநோய்), தொற்றாநோய் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுத்ரி, மருத்துவ மேலாளர் சந்திரசேகரன், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தலைமை மகப்பேறு மருத்துவர் ராஜேஸ்வரி உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள், உள்நோயாளிகளுக்கான சிகிச்சைகள் குறித்தும் பிரசவங்கள் மற்றும் குடும்பநல அறுவை சிகிச்சை குறித்தும் டாக்டர்களிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
மேலும், ‘பிக்மி’ இணைய தளத்தில் கர்ப்பிணிகளின் பதிவு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் பயனாளிகள் விவரம் ஆகியவை குறித்தும் விசாரித்தார்.
சு.வாளவெட்டி, பெரியகுளம், இளங்குன்னி, அரட்டவாடி, ஓசூர், கொவளை ஆகிய பகுதிகளில் அனைத்து பிரசவங்களும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்தன. இதற்காக பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களான டாக்டர்கள் புவனேஸ்வரி, பிரதீபா, ஜெயந்தி, ஆன்டோ ஏஞ்சல், செலஸ்ரீ, திருமூர்த்தி ஆகியோருக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டு தெரிவித்தார்.
மேலும் கண்புரை அறுவை சிகிச்சையில் சாதனை புரிந்த வட்டார மருத்துவ அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கர்ப்பகால பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள், தம்பதியினருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மருத்துவ அலுவலர்களுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார்.