பத்திர பதிவுத்துறை அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகை
பத்திர பதிவுத்துறை அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுவது வழக்கம். இதில் பாகப்பிரிவினை, சொத்து பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருதரப்பினற்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வழக்கை திரும்ப முடித்து கொள்வார்கள். அவ்வாறு ஏற்படும் சமரசம் முறையாக பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆவணம் கொடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் இருதரப்பினரிடையே பாகப்பிரிவினையில் ஏற்பட்ட சமரசத்தை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த வக்கீல் மனோகரன் அதற்கான ஆவணத்தை கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஆவணம் கொடுக்க காலதாமதம் ஆனது. மேலும் அவரிடம் லஞ்சம் கேட்டதாகவும், வக்கீல் மனோகரனை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அரியலூர் வக்கீல்கள் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வக்கீல்கள் பத்திர பதிவுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வக்கீல்கள் கூறியதாவது:- பத்திரப்பதிவு அலுவலகத்தில் புரோக்கர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாகவும், அவர்கள் மூலமாகவே அனைத்து வேலைகளும் நடக்கிறது. எனவே புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் எந்தந்த பதிவுக்கு எவ்வளவு கட்டணம் என அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும். லஞ்சம் கேட்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக வக்கீல்கள் தெரிவித்தனர்.