சிவகிரி அருகே திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

சிவகிரி அருகே உள்ள விசுவநாதபேரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2018-07-25 21:30 GMT
சிவகிரி, 

சிவகிரி அருகே உள்ள விசுவநாதபேரி திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திரவுபதி அம்மன் 

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விசுவநாதபேரியில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.

பூக்குழி திருவிழா 

பின்னர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கிருஷ்ணன், அர்ச்சுனன், திரவுபதி அம்மன் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர். பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து பூக்குழி இறங்கினர். பின்னர் நேற்று அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்