விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்
இந்திய விமான ஆணையம் மற்றும் விமான துணை நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக் கப்பட்டு உள்ளன.
இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனத்தில் ஒன்று ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்ட்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் (AIATSL) . தற்போது இந்த நிறுவனத்தில் கஸ்டமர் ஏஜென்ட், ஹேண்டிமேன், ஹேண்டி உமன் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் 89 பணியிடங்களும், கோவை விமான நிலையத்தில் 76 பணியிடங்களும் உள்ளன. இவை காண்டிராக்ட் அடிப்படையிலான பணிகளாகும். இதுதவிர மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, விமான நிலையங்களில் எச்.ஆர். அதிகாரி மற்றும் அக்கவுண்ட்ஸ் அதிகாரி பணிகளுக்கு 15 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
காண்டிராக்ட் பணி விண்ணப்பதாரர்கள் 1-7-2018-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
ஹஸ்டமர் ஏஜெண்ட் பணிக்கு பட்டதாரிகளும், ஐ.டி.ஐ. படித்தவர்கள் சீனியர் ரேம் சர்வீஸ் ஏஜெணட் பணிகளுக்கும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஹேண்டிமேன் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். டிரைவிங் லைசென்ஸ பெற்றவர்களுக்கும் பணிகள் உள்ளன.
விசாகப்பட்டினம் மற்றும் கோவை விமான நிலையங்களில் ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நாளில் , வெவ்வேறு இடங்களில் நேர்காணல் நடக்கிறது. நேரடி நேர்காணலில் எழுத்துத் தேர்வு, குழு கலந்துரையாடல், மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெறும். இவை பற்றிய விவரங்களை http://www.airindia.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
அதிகாரி பணிகள்
எச்.ஆர். மற்றும் அக்கவுண்ட்ஸ் அதிகாரி பணிகளுக்கு எச்.ஆர். , சி.ஏ., எம்.பி.ஏ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
rftc.aiatsl@airindia.in என்ற மெயில் முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 3-8-18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
இது பற்றிய விவரத்தையும் மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
விமான ஆணையத்தில் 119 பணிகள்
இந்திய விமான ஆணையம் சுருக்கமாக ஏ.ஏ.ஐ. என குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் மேற்கு மண்டலமான மும்பை கிளையில் ஜூனியர் அசிஸ்டன்ட் (தீயணைப்பு சேவை) பணிக்கு 119 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவினருக்கு 66 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 35 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 18 இடங்களும் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 30-6-18-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீயணைப்பு போன்ற பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படிப்பை 50சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 6-8-2018-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.aai.aero என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.