குழந்தைகளை கவனித்துக் கொள்ள தாய்க்கு சிறப்பு விடுமுறை அரசாணை வெளியீடு

குழந்தைகளை கவனித்து கொள்ள தாய் மற்றும் மனைவியை இழந்த ஆண்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கும் அரசாணை வெளியிடப்பட்டது.

Update: 2018-07-25 00:15 GMT
மும்பை,

மராட்டியத்தில் 18 வயதுக்கு குறைவான குழந்தைகளை பராமரித்துவரும் தாய்மார்களுக்கும், மனைவியை இழந்த ஆண்களுக்கும் குழந்தைகளை கவனித்துக்கொள்ள சிறப்பு விடுமுறை வழங்குவது என்று நாக்பூரில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

இதில், குழந்தைகள் 18 வயது ஆகும் வரை தாய்மார்களுக்கு 180 நாள் வரை சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனைவியை இழந்த ஆண்கள், குழந்தைகளை பராமரிக்க முடியாமல் படுக்கையில் இருக்கும் மனைவிகளின் கணவன்மார்களுக்கும் இந்த விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எந்த விதத்திலும் இந்த விடுமுறை தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதை அதற்கான அதிகாரிகள் உறுதி செய்துெகாள்ள வேண்டும்.

மாநில அரசு ஊழியர்கள், கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், வேளாண் மற்றும் வேளாண் அல்லாத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும்.

இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்