பரேல் ரெயில் நிலையம் அருகே கூட்ட நெரிசல்; பயணிகள் கடும் அவதி
ரெயில்வே மேம்பாலம் மூடப்பட்டதால் பரேல் ரெயில் நிலையம் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.;
மும்பை,
மும்பை அந்தேரியில் கடந்த 3-ந்தேதி ரெயில்வே மேம்பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து ரெயில்வே, மாநகராட்சியினர் மும்பையில் உள்ள ரெயில்வே மேம்பாலங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் லோயர் பரேலில் உள்ள தெலிஸ்லே பரேல் ரெயில்வே மேம்பாலம் ஆபத்தான நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த பாலத்தில் நேற்று சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. எனவே மேம்பாலத்தில் வாகனங்கள் தவிர பொதுமக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று காலை கரிரோடு ரெயில்நிலையத்தில் இருந்து லோயர் பரேலுக்கும், லோயர் பரேல் பகுதியில் இருந்து கரிரோடு ரெயில்நிலையத்திற்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சென்றனர். இதில், சீரமைப்பு பணிக்காக பரேல் ரெயில்வே மேம்பாலம் மூடப்பட்டதால் பயணிகள் அந்த பாலத்திற்குள் கீழே உள்ள குறுகிய வழி வழியாக சென்றனர்.
அந்த வழியில் ஏற்கனவே அதிகளவு வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த காட்சிகள் கடந்த ஆண்டு எல்பின்ஸ்டன் ரோடு ரெயில்நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலால் 23 பேர் பலியான சம்பவத்தை நினைவுப்படுத்தியது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்தநிலையில் அங்கு வந்த ரெயில்வே, போக்குவரத்து போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். எனினும் அந்த வழியில் நெரிசல் அதிகமாக இருந்ததால் பயணிகள் ஒருவித அச்ச உணர்வுடன் அந்த பாதையை கடந்து சென்றனர்.
இது குறித்து சுரேகா என்ற பயணி கூறுகையில், சீரமைப்பு நடைபெறும் பரேல் ரெயில்வே மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும், என்றார்.