தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-24 22:30 GMT
தர்மபுரி,

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிதிட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து, பொருளாளர் முருகன், மாவட்ட நிர்வாகிகள் ஆறுமுகம், சின்னபையன், ராஜாரவி, கோவிந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மல்லையன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இதில் பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் தேசிய ஊரக வேலைதிட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் தொடர்ந்து பணி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் பணியும், ஒரு நாளைக்கு ரூ.400 ஊதியமும் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.விவசாய தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தொகை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்