கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

Update: 2018-07-24 22:30 GMT
மலைக்கோட்டை,

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ஞான பிரகாசம், தஞ்சை மாவட்ட தலைவர் மாதவன், நாகை மாவட்ட தலைவர் சேவியர் பிரகாசம் ஆகியோர் பேசினர். புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தங்கமணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும். பங்கேற்பு ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசாணை 100, 101 மூலம் அரசு பள்ளிகளை மூடுவதை ரத்து செய்ய வேண்டும். ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறினார். முன்னதாக திருச்சி மாவட்ட செயலாளர் பழனிசாமி வரவேற்றார். முடிவில் திருச்சி மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்