குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு நகராட்சியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-24 22:15 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பெரியநத்தம், சின்னநத்தம், அண்ணாசாலை, அனுமந்தபுத்தேரி, மேட்டுத்தெரு, ராஜாஜிதெரு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு பழவேலி, மற்றும் திம்மாவரம் பாலாற்றில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கி வந்தனர்.

தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

கடந்த 6 மாதங்களாக வினியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து நகராட்சி ஆணையரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகளும் முதியோர்களும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மிகுந்த அவதிக்கு ஆளாகிறோம். எனவே இந்த பிரச்சினைக்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்