பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் 48 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 48 பேரை போலீசார் கைது செய்தனர்.
செம்பனார்கோவில்,
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆக்கூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இதன் மூலம் காலமநல்லூர், குமாரக்குடி, சங்கேந்தி, வடக்கட்டளை, ராதாநல்லூர், கீழவேலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 338 பேருக்கு கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் பயிர்க்காப்பீட்டு தொகை தற்போதுவரை வழங்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் ஆக்கூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ், வட்ட செயலாளர் ராசையன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்போது, பயிர்க்காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும், அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டோர் நிழலுக்காக பந்தல் போடும் பணியில் ஈடுபட்டனர். அதனை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 48 பேரை செம்பனார்கோவில் போலீசார் கைது செய்தனர்.