கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், விவசாய தொழிலாளர்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகைமாலி கலந்து கொண்டு பேசினார். மத்திய அரசு 100 நாள் வேலைக்கான நிதியை குறைத்து 100 நாள் வேலை திட்டத்தை முடக்குவதை கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சட்டக்கூலி ரூ.224-ஐ முழுமையாக வழங்க வேண்டும். 100 நாள் வேலைக்கு 20 முதல் 50 பயனாளிகளுக்குத்தான் வேலை என்பதை தவிர்க்க வேண்டும். வேலை அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் எந்திரங்களை அனுமதிக்கக்கூடாது. 100 நாள் வேலை திட்டத்தை வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு 15 நாட்களில் ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். காலத்தாமதமாக வழங்கும் ஊதியத்திற்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி வட்டியுடன் கூடிய தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் அம்பிகாபதி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் வெற்றியழகன், மாவட்ட துணை செயலாளர்கள் மீரா, ஜீவாராமன், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை தலைவர்கள் முருகையன், மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.