போலி சப்–இன்ஸ்பெக்டர் கைது

சாத்தூரை ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் என கூறி நிதி நிறுவனம் நடத்தை வந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-25 00:15 GMT

சாத்தூர்,

சாத்தூரை அடுத்த படந்தால் அருகே தென்றல் நகரில் வசித்து வரும் பழனிசாமி என்பவரது மகன் கண்ணன்(வயது39). இவர் ரெயில்வேயில் சப்–இன்ஸ்பெக்டர் என்று கூறி சாத்தூரில் நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இதனை அறிந்த படந்தால் கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கண்ணன் கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் நிதிநிறுவனத்தில் பணம் பெற்றவர்கள் ஏமாற்றிவிடாமல் இருக்க சப்–இன்ஸ்பெக்டர் என கூறியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டை சோதனையிட்டதில் ரெயில்வே காவலர் உடை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் கண்ணன் ஆர்.பி.எப். என்று எழுதி இருந்ததும் தெரிய வந்தது. காவலர் உடையையும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த போலீசார், கண்ணனையும் கைது செய்தனர். அவரை சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்