மாத்தூரில் கார்கள் நேருக்குநேர் மோதல் பெண் தொழிலாளி பலி 6 பேர் படுகாயம்
மாத்தூரில் கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பெண் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஆவூர்,
திருச்சி விமானநிலையத்தை சேர்ந்தவர் பாலன் (வயது 43). என்ஜினீயர். இவர் புதுக்கோட்டை அருகே உள்ள திருமயத்தில் கட்டிடம் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாலன் தனது காரில் வேலைக்காக திருச்சியில் இருந்து 2 கொத்தனார், 2 பெண் தொழிலாளர்களை காரில் அழைத்துக் கொண்டு திருமயத்திற்கு சென்றார்.
பின்னர் அங்கு வேலை முடித்து விட்டு, அதேகாரில் நேற்று முன்தினம் இரவு திருமயத்தில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். மாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, எதிரே திருமயத்தைச் சேர்ந்த தீனதயாளன்(24) என்பவர் தனது உறவினரை வெளிநாட்டிற்கு விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டு, ஒரு காரில் தனது உறவினர்களுடன் வந்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் பாலனின் காருக்கு முன்னால் குறுக்கே ஒரு நாய் சென்றது. இதனா ல் அதன் மீது மோதாமல் இருக்க வலது புறமாக காரை திருப்பினார். இதில் எதிர்பாராத விதமாக தீனதயாளன் காரும், பாலனின் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் என்ஜினீயர் பாலன், அவரது காரில் சென்ற தோகைமலை அருகே உள்ள காவக்காரன்பட்டியை சேர்ந்த பெண் கூலிதொழிலாளி சின்னப்பொண்ணு(57). திருமயத்தைச் சேர்ந்த கார் டிரைவர் தீனதயாளன் மற்றும் அவரது உறவினர்கள் வெள்ளையம்மாள்( 47), மகாலிங்கம் (43) அவரது குழந்தை தேவகி (3), யோகராஜ் (37) ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் மாத்தூர் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சின்னப்பொண்ணுவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற 6 பேரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.