முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழா: பால்குடங்களுடன் திரளான பக்தர்கள் ஊர்வலம்
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழாவையொட்டி பால்குடங்களுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக வந்தனர்.
ஆரல்வாய்மொழி,
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலில் பூக்குழி கொடைவிழா கடந்த 22–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் நேற்று காலை கணபதிஹோமமும், தொடர்ந்து ஆரல்வாய்மொழி அகலிகை ஊற்று பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலமும் நடந்தது. ஊர்வலத்தில் முன்னே அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதமும் அதன் பின்னே பஜனை மற்றும் மேளதாளங்களுடன் திருநங்கைகள் ஆடி பாடி வந்தனர்.
அதனை தொடர்ந்து ஆலமூடு அம்மனின் திருமுகம் ஏந்திய பவனி வர ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூங்கரகம், அபிஷேக குடங்கள், முளைப்பாத்தி, வேல்குத்து, பறவைகாவடி, சூரிய காவடியுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்தை கோவில் நிர்வாகி அருணாசலம் தலைமையில் மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசா சோமன், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலம் வடக்கூர், வணிகர்தெரு, எம்.ஜி.ஆர். நகர், மூவேந்தர் நகர் வழியாக முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவிலை வந்தடைந்தது. ஊர்வலத்தில் வந்த பக்தர்களுக்கு அப்பகுதி மக்கள் ஆங்காங்கே மோர், பழம், குளிர்பானங்களை வழங்கினார்கள்.
பின்னர், கோவிலில் சுவாமிகளின் பாயாச குளியல், காலை 11 மணியிலிருந்து அன்னதானம் நடைபெற்றது. மதியம் தீபாராதனை, மாலை 4 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், 5 மணிக்கு அம்மன் தேரில் பவனி, தொடர்ந்து உலக ஐக்கிய பாதுகாப்பு கழகம் மற்றும் கோவில் சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பூக்குழிக்கான அக்னி வளர்த்தல், சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குவிந்திருந்தனர். மேலும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தது. உள்ளூர் மற்றும் வெளியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவில் இன்று (புதன்கிழமை) மதியம் மஞ்சள் நீராடுதல், உற்சவ மூர்த்திக்கு நீராட்டு, திருஷ்டி பூஜை போன்றவை நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அருணாசலம் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.