தேசிய ஊரக வேலை வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு மற்றும் அனைத்திந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-07-23 22:29 GMT

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள திருக்கூர்ணம், கோட்டாநத்தம் ஆகிய ஊராட்சிகளில் கடந்த ஒரு ஆண்டாக தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் அனைத்திந்திய கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை தலைமையில் 50–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் திருக்கூர்ணம், கோட்டாநத்தம் ஆகிய ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்கக்கோரி கோ‌ஷங்களை எழுப்பினர். சிறிது நேரம் கோ‌ஷமிட்ட அவர்கள், பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், உதவி பொறியாளர் மகேந்திரன் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்து விட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்