காஞ்சீபுரத்தில் வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து நிதி நிறுவன அதிபர் வீட்டில் கொள்ளை
காஞ்சீபுரத்தில், வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து நிதி நிறுவன அதிபர் வீட்டில் 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் இந்திரா நகர் அம்பேத்கர் சாலையில் வசித்து வருபவர் குமரவேல். இவர், சொந்தமாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தனது மனைவியுடன் வெளியூர் சென்று விட்டார். வீட்டில் அவருடைய மாமியார் சரஸ்வதி(வயது 56) மட்டும் தனியாக இருந்தார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் ஒரு காரில், டிப்-டாப் உடை அணிந்த 5 பேர், குமரவேல் வீட்டுக்கு வந்தனர். அவர்கள், வீட்டில் இருந்த சரஸ்வதியிடம் குமரவேல் குறித்து விசாரித்தனர்.
பின்னர் அவர்கள், நாங்கள் வருமானவரி அதிகாரிகள். காஞ்சீபுரம் வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்து உள்ளோம். வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறி வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டினர்.
சரஸ்வதியிடம் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்யும்படி கூறிய அவர்கள், வீடு முழுவதும் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினர். பிறகு சரஸ்வதியிடம் பீரோ சாவியை வாங்கிய அவர்கள், பீரோவை திறந்து அதில் இருந்த சுமார் 50 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர்.
பின்னர் சரஸ்வதியிடம், காஞ்சீபுரம் அலுவலகத்துக்கு குமரவேலை வரும்படி கூறிவிட்டு நகை, பணத்துடன் டிப்-டாப் ஆசாமிகள் 5 பேரும் தாங்கள்வந்த காரிலேயே ஏறிச்சென்று விட்டனர்.
அதன்பிறகு சரஸ்வதி, தனது மருமகன் குமரவேலுக்கு செல்போன் மூலம் நடந்த விவரங்களை தெரிவித்தார். அதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால் துறை ரீதியாக நோட்டீஸ் வழங்கி அதில் கையெழுத்து பெறுவது வழக்கம். ஆனால் இந்த கும்பல், ஒரு வெள்ளை தாளில் மட்டும் சரஸ்வதியிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டதுடன், அதையும் அவர்களே எடுத்து சென்றுவிட்டதாக சரஸ்வதி தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த குமரவேல், இதுபற்றி வருமானவரித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், தாங்கள் எதுவும் அதுபோல் சோதனை நடத்தவில்லை என்று தெரிவித்தனர்.
அதன்பிறகுதான் வந்தவர்கள் போலியானவர்கள் என்பதும், வருமானவரி அதிகாரிகள் போல் நடித்து தனது வீட்டில் 50 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதும் குமரவேலுக்கு தெரியவந்தது.
மேலும் கொள்ளையர்கள், சரஸ்வதி கழுத்தில் கிடந்த 25 பவுன் நகையை பறிக்காமல் விட்டுச்சென்று உள்ளனர். அதை கழற்றும்படி கூறினால், தாங்கள் கொள்ளையர்கள் என்பது தெரிந்து விடும் என்பதால் சந்தேகம் வராமல் இருக்க அந்த நகையை பறிக்காமல் சென்று இருக்கலாம் என தெரிகிறது.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசில் குமரவேல் புகார் செய்தார். அதன்பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம், தாலுகா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குமரவேல், அவருடைய மாமியார் சரஸ்வதியிடம் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். குமரவேல் வீடு மற்றும் அந்த பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் டிப்-டாப் ஆசாமிகள் வந்து சென்ற காரின் பதிவெண் பதிவாகி உள்ளது. ஆனால் கொள்ளையர்கள் காரில் போலியான பதிவெண்ணை மாட்டி கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். எனினும் அந்த பதிவெண்ணை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.காஞ்சீபுரம் முழுவதும் உள்ள போலீஸ் சோதனை சாவடிகள், போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டது.
இது குறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பஞ்சாட்சரம் கூறும்போது, “குமரவேல் வீட்டை சுற்றி உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். அதில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளது. விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம்” என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.