பல் மருத்துவபடிப்பில் சேர பழங்குடியின சமூக மாணவிக்கு ரூ.17 லட்சம் அரசு உதவித்தொகை, கலெக்டர் வழங்கினார்
ஜமுனாமரத்தூர் தாலுகாவை சேர்ந்த பழங்குடியின மாணவியின் மருத்துவ படிப்பிற்கு ரூ.17¼ லட்சம் உதவித்தொகை வழங்க கலெக்டர் ஏற்பாடு செய்துள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா பட்டன்கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். கூலி தொழிலாளி. இவரது மகள் சுமத்ரா, குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வில் 973 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் அவர் போளூர் அரசு பள்ளியில் அரசால் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்பில் பயின்று அந்த தேர்வில் 135 மதிப்பெண் பெற்று உள்ளார்.
இதன் மூலம் சுமத்ராவுக்கு சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லூரியில் கட்டண முறையில் பல் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு இடம் கிடைத்து உள்ளது. ஆனால் அதற்கான கட்டணம் செலுத்த அவருக்கு வசதியில்லாததால் வேறு படிப்பை தேர்வு செய்ய முடிவு செய்து திரும்பினார். இது குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, சுமத்ராவின் தந்தை மாணிக்கத்திற்கு தொடர்பு கொண்டு உள்ளார்.
இதனையடுத்து சுமத்ராவின் பல் மருத்துவபடிப்புக்கு அரசு கல்வி உதவித்தொகை ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் கிடைக்க கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும் ஸ்பிக் நிறுவனம் மூலம் ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 700-ம், சென்னை கோடம்பாக்கம் ரோட்டரி கிளப் மூலம் ரூ.50 ஆயிரமும், திருவண்ணாமலை பிரைட் ரோட்டரி கிளப் மூலம் ரூ.50 ஆயிரமும் கிடைக்க வழிவகை செய்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.17 லட்சத்து 27 ஆயிரத்து 700 பெற்று கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஆணையை மாணவி சுமத்ராவிடம் கலெக்டர் கந்தசாமி நேற்று வழங்கினார். அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாணவியின் பெற்றோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், “ஜவ்வாதுமலைவாழ் பகுதியில் இருந்து ‘நீட்’ தேர்வில் தகுதி பெற்று முதல் முறையாக பழங்குடியின சமூக மாணவி சுமத்ரா சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லூரியில் படிக்க அனுப்பி வைக்கப்படுகிறார். இந்த மாணவியின் பெற்றோர் ஏற்கனவே ஏழ்மையில் உள்ளதால், பொருளாதார வசதி, கடன் அதிகமாக இருந்ததால் கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க முடியாத சூழ்நிலையில் திரும்பி வந்து உள்ளனர்.
இந்த மாணவியின் நிலை அறிந்து கல்லூரி நிர்வாகத்திடம் பேசி அந்த மாணவி சேருவதற்கு அனுமதி பெறப்பட்டது. மேலும் இந்த மாணவிக்கு 4 வருடம் பல் மருத்துவம் படிப்பதற்கு தேவையான முழு தொகையும் மாணவி சுமத்ரா மற்றும் கல்லூரி பதிவாளர் இணைந்து வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு, அதில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.