லாரிகள் வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு: தமிழகத்தில் ரூ.8 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு
லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதனால் தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.8 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சம்மேளன தலைவர் குமாரசாமி கூறினார்.
நாமக்கல்,
பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டு ஒருமுறை சுங்க கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் கடந்த 20-ந் தேதி முதல் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதன் காரணமாக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகள் ஆங்காங்கே தேக்கம் அடைந்து உள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் வேலைநிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை உயரும் அபாயம் இருந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு அதிகாரிகள், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் மத்திய அரசு அதிகாரிகள் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கவில்லை. எனவே லாரி உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த ஆலோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியதாவது:- லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழக லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி வீதம், கடந்த 4 நாட்களில் ரூ.800 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த தொழிலில் நேரடியாக ஈடுபட்டு உள்ள டிரைவர், கிளனர் 8 லட்சம் பேர் மற்றும் இதர தொழிலாளர்கள் என 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
தமிழக அளவில் மட்டும் நாள்ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வீதம் 4 நாட்களில் சுமார் ரூ.8 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மத்திய அரசு எங்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் இருந்து வருகிறது. எனவே போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது குறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலைநிறுத்தம் நீடித்து வருவதால் நாமக்கல் பகுதியில் உள்ள பட்டறைகளில் லாரிகள் குவிய தொடங்கி உள்ளன. அங்கு லாரிகளில் உள்ள சிறு, சிறு பழுதை மெக்கானிக் உதவியுடன் நீக்கும் பணியில் டிரைவர் மற்றும் கிளனர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வேலைநிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என எதிர்நோக்கி உள்ளனர்.
லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் முதல் 2 நாட்கள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இதனால் நாமக்கல் மண்டலத்தில் 2 நாட்களில் சுமார் 5 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்தன. இதற்கு மேலும் முட்டைகள் தேங்கும் பட்சத்தில் கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டும் என்பதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் நேற்று முன்தினம் மாலை முதலே தங்களுக்கு சொந்தமான லாரிகளில் முட்டைகளை ஏற்றி விற்பனைக்கு அனுப்ப தொடங்கினர். இந்த பணி நேற்று 2-வது நாளாக நீடித்தது. இருப்பினும் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பதால் முட்டைகளை முழுமையாக கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருவதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
மேலும் லாரிகள் வேலை நிறுத்தம் நீடிக்கும் பட்சத்தில் கோழித்தீவன மூலப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.