பொதுப்பணித்துறை சான்று கொடுத்த குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
பொதுப்பணித்துறை சான்று கொடுத்த குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை சான்று கொடுத்த குளங்களில் மட்டுமே வண்டல் மண் எடுக்கலாம், என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வண்டல் மண் எடுப்பதாக கூறி மணல் கடத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாசில்தார் சான்றிதழ் கொடுத்து இருந்தாலும், பொதுப்பணித்துறை எந்த குளத்தில் வண்டல் மண் அள்ள சான்றிதழ் கொடுத்து உள்ளதோ அந்த குளத்தில் மட்டுமே மண் அள்ள வேண்டும். விளாத்திகுளத்தில் விதிமுறை மீறி மண் அள்ளிய 12 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 300 குளங்களில் 3 லட்சம் கனமீட்டர் மண் அள்ளப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 900 விவசாயிகள் பயன்பெற்று உள்ளனர்.
தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் மேம்பாலம் அமைப்பது தொடர்பாக கோர்ட்டில் ஒரு வழக்கு உள்ளது. அந்த வழக்கு முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பிசான சாகுபடிக்கு போதுமான தண்ணீர் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பருவத்தில் தண்ணீர் கிடைத்து உள்ளது. தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 1500 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்த தண்ணீர் 4 கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ரசாயனங்கள் மற்றும் பொருட்கள் அகற்றும் பணி 95 சதவீதம் முடிவடைந்து உள்ளது. கந்தக அமிலம் 7 ஆயிரம் டன், பாஸ்பாரிக் அமிலம் 600 டன், ஜிப்சம் 27 ஆயிரம் டன், ராக்பாஸ்பேட் 1000 டன் அகற்றப்பட்டு உள்ளது. இது தவிர திரவ ஆக்ஸிஜன், ஐசோபுரோபைல் ஆல்கஹால், எரிவாயு(எல்.பி.ஜி.) ஆகியவை முற்றிலும் வெளியேற்றப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.