திருச்சியில் சோகம்: பிளாஸ்டிக் குடோன் தீ விபத்தை பார்த்த அதிர்ச்சியில் மூதாட்டி சாவு
திருச்சியில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தை பார்த்த அதிர்ச்சியில் மூதாட்டி மரணமடைந்தார்.
திருச்சி,
திருச்சி அரியமங்கலம் அமலர்புரம் திருமகள் தெருவில் அழகர், சுடர்மணி ஆகியோருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைத்து மறு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் தனியார் நிறுவனங்களிடம் பிளாஸ்டிக் கழிவுகளை மொத்தமாக பெற்று சேகரித்து அதனை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்கின்றனர். குடோனுக்கு வெளியில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிளாஸ்டிக் குடோனில் திடீரென கரும்புகை வெளிவந்து தீப்பிடிக்க தொடங்கியது. இந்த தீ முதலில் லேசாக எரிந்தது. பின்னர் மளமளவென எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டை விட்டு வெளியேறி விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைஅணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. தீ கொழுந்து விட்டு எரிந்தது. ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளில் தீ பரவியது. இதைதொடர்ந்து பாய்லர் ஆலையில் இருந்து மேலும் 2 தீயணைப்பு வண்டிகளும், மாநகராட்சியில் இருந்து 2 தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன.
பிளாஸ்டிக் குடோனிற்குள் நேரடியகாக செல்ல முடியாததால் அருகில் இருந்த கட்டிடங்களின் வழியாகவும், மரத்தின் மீது ஏறி நின்றும் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
இதில் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வர போராடினர். இருப்பினும் குடோனில் கட்டிட பகுதியில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர தாமதமானது. நேற்று காலையில் தான் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
இருப்பினும் தீ விபத்தால் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக கணக்கிடப்பட்டுள்ளது. தீ விபத்துக்கு மின்சார கசிவு காரணமா? அல்லது அணைக்காமல் வீசி எறிந்த சிகரெட் துண்டால் தீப்பற்றி கொண்டதா? என தெரியவில்லை. அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னதாக பிளாஸ்டிக் குடோனில் பயங்கரமாக தீப்பிடித்ததை அறிந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தனர். அங்கு கரும்புகையுடன் விண்ணை மூட்டும் அளவுக்கு தீ எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குடோன் எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்த சரோஜா (வயது65), பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சரோஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். தீயை அணைக்க ஒருபுறம் தீயணைப்பு வீரர்கள் போராடி கொண்டிருந்த நிலையில் விபத்தை பார்த்த அதிர்ச்சியில் மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சரோஜாவின் கணவர் நடராஜன். இவர் பாய்லர் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது அவர் தனியாக லேத் பட்டறை நடத்தி வருகிறார்.
தீ விபத்தால் குடோன் முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் கட்டிடத்தின் பல பகுதிகள் நெருப்பால் விரிசல் விட்ட நிலையில் உள்ளது. எனவே, எந்த நேரமும் கட்டிட சுவர் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் குடோன் அருகிலேயே குடியிருப்புகள் உள்ளன. எனவே, மாநகராட்சி நிர்வாகம் குடோனுக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்திட வேண்டும். சேதமான குடோன் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.