இன்றும், நாளையும் மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Update: 2018-07-22 23:00 GMT
மும்பை, 

மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

பலத்த மழை

மராட்டியத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. மாநில தலைநகர் மும்பையிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் மும்பையில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர மும்பைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகள் நிரம்பின. கடந்த சில நாட்களாக மும்பையில் சாரல் மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மும்பை வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

ஏரிகள் நிரம்பலாம்

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தலைமை அதிகாரி மகேஷ் பலவாத் கூறுகையில், “மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 115 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மும்பை தவிர தானே, பால்கரிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்றார்.

மும்பையில் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்தால் வைத்தர்னா, பட்சா ஆகிய ஏரிகளும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்