பணம், தங்க கட்டிகள் பறிமுதலில் வருமான வரி சோதனையின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்
கட்டுக்கட்டாக பணம், தங்க கட்டிகள் பறிமுதலில் வருமான வரி சோதனையின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருச்சி,
‘நீட்’ தேர்வில் தமிழ் மொழி பெயர்ப்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை மத்திய, மாநில அரசுகள் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எப்படி தீர்வு கிடைக்கும். சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மாநில அரசு தங்களுக்கு பொறுப்பு இல்லை என்பதை தட்டிக்கழிக்க கூடாது.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது. சரக்குகள் பாதிப்பு, தேக்கம் அடைகிறது. பாலியல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆந்திரா, கேரளாவில் தடுப்பணைகள் கட்ட சிவப்பு கம்பளம் கொடுக்கிறவர்கள், தமிழகத்தில் கடைமடை விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடுப்பணைகள் கட்ட மறுக்கிறார்கள். இதனை விவசாயிகள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் வெளிவந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கட்டுக்கட்டாக பணம், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாருடைய வரிப்பணத்தில் இருந்து இவை வந்தது. கருப்பு பணம் எப்படி வந்தது. இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டியது அரசு. வருமான வரி சோதனையின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் வட மாநில திருடர்கள் அதிகமாகிவிட்டனர். அவர்களை தடுக்க வேண்டும். தமிழக அரசு குடிமராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. கல்லணையில் ஆகாய தாமரை பரவி கிடக்கிறது. இயற்கை நம்மை காப்பாற்றுகிறது. ஆனால் அரசு காப்பாற்ற மறுக்கிறது. தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் மற்றும் அதி தொழில்நுட்ப வாய்ந்த திட்டம் தேவை. இதனை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து திருச்சி கீரைக்கடையில் பெருந்தலைவர் காமராஜர் பேரவை மற்றும் த.மா.கா. சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கி பேசினார். விழாவில் காமராஜர் பேரவை தலைவர் மூர்த்தி, த.மா.கா. மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில் (மாநகர்), குணா (தெற்கு மாவட்டம்), ரவீந்திரன் (வடக்கு மாவட்டம்) மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.