அமராவதி ஆற்றில் மூழ்கிய மாணவரின் கதி என்ன? தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் தீவிரம்
கரூர் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கிய மாணவரை தேடும் பணியில் தீயணைப்பு படைவீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர்,
கரூர் திருமாநிலையூரை அடுத்த செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி செல்வி. அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுடைய மகன் ஹரி (என்கிற) சபரீஸ்(வயது 17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஹரி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அப்பகுதியிலுள்ள அமராவதி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது விளையாட்டுத்தனமாக ஆற்றின் மையபகுதிக்கு சென்ற அவர் திடீரென மாயமானார். சிறிது நேரத்தில் ஹரி காணாமல் போனதை அறிந்ததும் நண்பர்கள் அச்சமடைந்து தேடிப்பார்த்தனர். பின்னர் இந்த தகவல் ஊர் பொதுமக்களுக்கு தெரிய வந்ததும் அவர்களில் சிலர் ஆற்றில் குதித்து தேடும் பணியில் இறங்கினர்.
இதையறிந்த ஹரியின் பெற்றோர், உறவினர்கள் கதறி துடித்தபடியே அந்த ஆற்றங்கரைக்கு ஓடோடி வந்து செய்வதறியாது திகைத்து நின்றனர். இதற்கிடையே இது குறித்து கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி கணேசன் தலைமையில் நிலைய அலுவலர் விஜயகுமார் உள்பட தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு மதியம் 3 மணியளவில் வந்தனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு உடை உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். நேரம் செல்ல செல்ல வெளிச்சம் நீங்கி இருள் சூழ்ந்ததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து ஓடும் நீரில் மாணவர் அடித்து செல்லப்பட்டிருக்கலாமா? என சந்தேகமடைந்த தீயணைப்பு வீரர்கள் திருமாநிலையூர் புதிய அமராவதி பாலம் மற்றும் கரூர் ஐந்து ரோடு உள்ளிட்ட இடங்களில் தேடும் பணியை தொடர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய்கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் செல்லாண்டிபாளையம் ஆற்றங்கரைக்கு வந்து மாணவர் ஹரி நீரில் மூழ்கியது எப்படி? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாணவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, ஹரியை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது ஹரிக்கு நன்றாக நீச்சல் தெரியும். அப்படி இருக்கையில் தண்ணீரில் சென்றுவிட்டானே... என பெற்றோர் கதறியது காண்போரை கண்கலங்க செய்யும் வகையில் இருந்தது. ஆற்றில் மூழ்கிய மாணவரின் கதி என்ன? என்பது குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அன்பழகன் கூறுகையில், மாணவர் ஹரி ஆற்றில் மூழ்கியது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு தீயணைப்புத்துறை, வருவாய்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அமராவதி, காவிரி ஆறுகளில் அதிகப்படியான நீர் வருவதால் அங்கு குளிக்க செல்லும் தங்களது குழந்தைகளை பெற்றோர் நன்கு கண்காணிக்க வேண்டும். சிறிய குழந்தைகளை அங்கு குளிக்க அனுப்பாமல் இருப்பது நல்லது. மேலும் மக்கள் அதிகளவில் குளிக்கும் இடங்களில் போலீஸ் துறை சார்பில் கண்காணிப்பு பணியை மேற்கொள்வதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
அமராவதி ஆறு முன்பு வறண்டிருந்ததால் ஆங்காங்கே சில இடங்களில் மண் அள்ளப்படுவதாக விவசாய சங்கத்தினர் சார்பில் குற்ற சாட்டு எழுந்தது. அந்த வகையில் தற்போது கரூர் அமராவதியில் தண்ணீர் ஓடுவதால் புதை மணல் பகுதியாக சில இடங்கள் மாறிவிடுகிறது. அந்த மாதிரியான இடத்தில் குளிக்கும் போது விபரீத சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.