காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவரிடம் போலீசார் விசாரணை
திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவருடைய கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி பிராட்டியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 38). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரும், புங்கனூரை சேர்ந்த மலர்விழியும்(30) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். மலர்விழி தனியார் கல்லூரி கேண்டீனில் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவர் வீட்டில் இருந்த தனது மகளை வெளியே போக கூறிவிட்டு திடீரென தூக்குப்போட்டு கொண்டார். சிறிதுநேரத்தில் அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.
இதைக்கேட்டு மலர்விழியின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது அரசு மருத்துவமனையில் இருந்த மலர்விழியின் கணவர் ராஜேந்திரனிடம் அவருடைய உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். மலர்விழியின் சாவுக்கு ராஜேந்திரன் தான் காரணம் என்று கூறினார்கள். உடனே இது பற்றி அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ராஜேந்திரனை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மலர்விழி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என ராஜேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.