லாரிகள் ஸ்டிரைக்: மதுரைக்கு காய்கறி வரத்து குறைவால் விலை உயர்வு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று 3–வது நாளாக லாரிகள் ஓடவில்லை.;

Update: 2018-07-22 22:30 GMT

மதுரை,

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்று 3–வது நாளாக லாரிகள் ஓடவில்லை. மதுரையிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து அத்தியாவசிய பொருட்களான பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் மதுரைக்கு வரவில்லை.

இதேபோல் மதுரையில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் அனுப்பப்பட வில்லை. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் காய்கறிகள் தற்போது மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகின்றன. இதனையே பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.

முட்டைகோஸ், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளின் வரத்து குறைந்து விட்டது. இதனால் அவற்றின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் இல்லாத அளவிற்கு எல்லா காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்