மதுக்கடைகளை மூடக்கோரி காந்திய மக்கள் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காந்திய மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-22 22:15 GMT

ஈரோடு,

லோக் ஆயுக்தா சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ஈரோடு ஆர்.என்.புதூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஏ.பி.பெரியசாமி தலைமை தாங்கினார்.

மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் ராஜீவ்குமார், மாவட்ட துணைத்தலைவர் பி.ராஜேந்திரன், பொதுச்செயலாளர் எஸ்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட செயலாளர்கள் குபேரன், சின்ராஜ், பொருளாளர் அரசு, மாநகர செயலாளர் லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்