செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஏற்படும் சிக்கல்கள்..
நாம் வளர்க்கும் நாய்களுக்கு செல்லப்பிராணிகள் என்ற பாசமான பெயரை சூட்டியிருக்கிறோம்.
நமது செல்லப்பிராணிகள் எல்லோருக்கும் செல்லமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோரிடமும் அது விசுவாசமாக இருக்கும் என்றும் கூறுவதற்கில்லை. உங்கள் வீட்டு பிராணி, உங்களோடு பழகுவது போன்று மற்றவர்களிடமும் பழகாது. அது ஆசையோடு நெருங்கினாலும், மற்றவர்களுக்கு அது பிடிக்குமா என்பதும் தெரியாது.
செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அதை வெளியில் அழைத்துச் செல்லும்போது, அதை இஷ்டத்திற்கு விட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். அதை பார்த்து யாராவது பயந்து ஓடினால், ‘பயப்படாதீர்கள் அது யாரையும் எதுவும் செய்யாது’ என்று குரல் கொடுப்பார்கள். நாய் கடிக்காது என்று நிச்சயமாக சொல்ல முடியுமா? தாங்கள் வளர்க்கும் நாய் ஒருவரை கடித்துவிட்டாலும், ‘நாய் தெரியாமல் கடித்துவிட்டது’ என்று நாய்க்காக தான் பரிந்துபேசுவார்கள். அவர்களுக்கு தங்கள் செல்லப் பிராணிகள் மீது அவ்வளவு பிரியம்.
தெருவில் சுற்றும் நாய்களுக்கும், வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? அதற்கு எஜமான் இல்லை. இதற்கு எஜமான் உண்டு அவ்வளவு தான். மற்றபடி நாய், நாய் தானே! வெளியில் சுற்றும் நாய்களைக் கல்லால் அடித்துவிட்டு சிலர் ஓடிவிடுவார்கள். ஆனால் வீட்டில் வளர்க்கும் நாய்களை லேசாக மிரட்டினால்கூட சண்டைக்கு வந்துவிடுவார்கள்.
மிருகங்களுக்காக பரிந்து பேச விலங்கு நல வாரியம் உள்ளது. கடிபடும் மனிதர்களுக்கு பரிந்து பேச யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதனால் செல்லப்பிராணிகளை எஜமானர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அவைகளை பொது இடங்களில் அவிழ்த்துவிட்டு வழிப்போக்கர்களை மிரளவைப்பது சரியல்ல. நாய் வளர்க்கத்தான் உரிமை இருக்கிறது. அடுத்தவர்களை கடிப்பதற்கு அதற்கு உரிமையில்லை.
செல்லப்பிராணிகளை வளர்ப்பது இப்போது பேஷன் ஆகிவிட்டதால் பலரும் போட்டிபோட்டு வளர்க்கிறார்கள். அவைகளுக்கான முக்கியத்துவமும் அதி கரித்து, அவைகளும் குடும்ப உறுப்பினர்கள்போல் ஆகிவிட்டன. அதற்கென்று தனி பட்ஜெட் போட்டு செலவு செய் கிறார்கள். உயர்தர பராமரிப்பும் வழங்கு கிறார்கள்.
செல்லப்பிராணிகளும் மனிதர் களை போலத்தான், தனித்து வாழ முடியாது. தன் சுற்றத்தைத் தேடி ஓடிவிடும். சில வீடுகளில் செல்லப்பிராணிகள் நிலை மிகவும் பரிதாபம். வீட்டைவிட்டு வெளியேவிட மாட்டார்கள். வெளியுலகமே தெரியாமல் வளர் ப்பார்கள். அது வெளியே போகத் துடிக்கும். சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். அப்படி கட்டிவைத்திருப்பது கொடுமை யான செயல்.
வெளிநாடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர் களுக்கென்று சங்கம் உள்ளது. அவர்கள் அடிக்கடி சந்தித்து, தங்கள் அனுபவங் களை பலர் முன் சொல்லு வார்கள். அது மற்றவர்களுக்கு வழிகாட்டும் விதமாக இருக் கும். அத்தகைய அனுபவ பகிர்வுகள் மிக அவசியம். ஏன்என்றால், நம்மைவிட அறிவு குறைந்த பிராணிகளை பராமரிப்பது நமக்கு சவாலான விஷயம். அவைகளின் மனப்போக்கை புரிந்து கொள்ள வேண்டும். எது பிடிக்கும் எது பிடிக்காது என்பதை தெரி்ந்துகொள் ளவேண்டும். செல்லப் பிராணிகளை அடிமை போல வளர்க்க முடியாது. அவை களுக்கு அசவுகரியம் ஏற்படும் போது மனிதர்களை முரட்டுத்தனமாக எதிர்க்கும்.
உணவு விஷயத்திலும் ஒரு வரைமுறை வேண்டும். ஒவ்வொரு ரக நாயும், ஒவ்வொரு விதமான உணவினை விரும்பும். அவைகளை வழங்கவேண்டும். அதற்கு ஏற்படும் அசவுகரியங்களை சொல்லத்தெரியாது. அவைகளை புரிந்துகொள்ள நமக்கு அனுபவமும் பொறுமையும் தேவை. அவற்றிற்கு உடல்ரீதியான தொந்தரவுகள் இருந்தால் மனிதர்களுக்கு பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆர்வத்தோடு நாய்களை வாங்கிவிட்டு, அவைகளை வளர்க்க முடியாமல் அல்லல்பட்டு, அடுத்து யார் தலையில் கட்டுவது என்ற கோணத்தில் யோசிக்கக்கூடாது. நாய் வளர்ப்பது சாதாரண வேலை அல்ல. அது உங்களை காப்பதுபோல், உங் களால் அதை காக்க முடிந்தால் மட்டும் வளர்க்க முன்வாருங்கள். நாய்களை வளர்க்க விரும்புபவர்கள் இன்னொரு முக்கிய உண்மையையும் உணர்ந்துகொள்ள வேண்டும். தெருநாய்களுக்கு அக்கறையான பராமரிப்பு கிடைப்பதில்லை. ஆனாலும் அவை ஆரோக்கியமாகவே இருக்கும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களோ அடிக்கடி நோய்வாய்ப்படும். வீட்டில் வளர்க்கப்படும் பிராணி களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்ற உண்மையை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
நாய் வளர்ப்பவர்களுக்கு வெளிநாட்டில் வரைமுறைகள் உள்ளன. உரிமம் பெற்றுதான் வளர்க்கவேண்டும். உரிமம் பெற நிறைய நிபந்தனைகளுக்கு அவர்கள் உள்படவேண்டும். பொது இடத்தில் அது அசுத்தம் செய்தால், வளர்ப்பவர் தான் அதை சுத்தம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு அது தொந்தரவு கொடுத்தால் எஜமானர் அதற்கான அபராதத்தை செலுத்தியாகவேண்டும். இதையெல்லாம் மீறி செல்லப்பிராணி அவர்களோடு மகிழ்ச்சியாக இருக்கிறதா, ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதும் கண் காணிக்கப்படும். பராமரிப்பு திருப்திதராவிட்டால், நாய் வளர்ப்புக்காக அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டுவிடும்.
மனிதர்களோடு சேர்ந்து செல்லப்பிராணிகள் வாழ்வது சவாலான விஷயம் தான். பொதுவாக செல்லப்பிராணிகள் தனிமையை விரும்பாது. நாய், பூனை, லவ் பேர்ட்ஸ், புறா, கிளி என்று எதுவானாலும் தன் உறவுகளோடு சேர்ந்திருக்கவே விரும்பும். ஒரே ஒரு நாயை வளர்ப்பது என்பது அதன் இனத்திலிருந்து அதனைத் தனிமைப்படுத்துவது போன்றது தான். இந்த உண்மைகளை எல்லாம் புரிந்துகொண்டு, நன்றாக சிந்தித்து பிராணிகளை வளர்க்க முன்வாருங்கள். நானும் வளர்க்கிறேன் என்ற பேருக்காக அதை செய்யாதீர்கள். ஏன்என்றால் அவைகளும் மனிதர்களைப் போல் உயிர் உள்ளவை.. உணர்வும் உள்ளவை!