மதுவை விரட்டிய மங்கை

பள்ளிக்கூடங்களுக்கு படிக்கச் செல்லாமல் போதை மருந்து, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி யிருந்த சிறுவர்களை படிப்பின் மீது கவனம் பதிக்க செய்திருக்கிறார், குமுத் மிஸ்ரா.;

Update: 2018-07-22 06:14 GMT
குமுத் மிஸ்ரா மும்பையிலுள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

மும்பையின் ஒதுக்குப்புறமான பாந்து என்ற பகுதியில் வசிக்கும் ஆதிவாசி இன சிறுவர்கள் ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல் மது, போதை பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பதை அறிந்தவர் அவர்களது பெற்றோரை சந்தித்து பேசியிருக் கிறார். ஆனால் சிறுவர்களும், அவர்களுடைய பெற்றோரும் கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும், படிப்பு மீது ஆர்வம் காட்டாமலும் இருந்திருக்கிறார்கள்.

அந்த பகுதியில் இரண்டு மாநகராட்சி பள்ளிகள் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் பள்ளிக் கூடம் செல்வதை விரும்பாததற்கு காரணம் என்ன? என்பதை ஆராய களப்பணியில் இறங்கி இருக்கிறார். முதல்கட்டமாக 40-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த பகுதியில் மதுக்கடைகளும் அதிகம் இருந்திருக்கிறது. அதனால் பெரும் பாலான சிறுவர்கள் மதுப்பழக்கத் திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். ஒருசிலரை போதைப் பழக்கமும் தொற்றியிருக்கிறது. இதையடுத்து போலீசாரின் உதவியுடன் அந்த பகுதியில் இயங்கி வந்த 8 மதுக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

‘‘மதுக்கடைகள் அருகில் இருப் பதால் சிறுவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மதுக்கடைகளை மூடிவிட்டால் அவர்கள் கவனம் அதன் பக்கம் திரும்பாது. வேறு வழி இல்லாமல் படிப்பின் மீது கவனம் திரும்பி விடும் என்று நினைத்தேன். மதுக்கடைகளை மூடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கடும் போராட்டத்திற்கு பிறகு கடைகள் மூடப்பட்டன. பின்பு கிராம மக்களை சந்தித்து படிப்பின் அவசியத்தை எடுத்து கூறினேன்.

அவர்களுடன் பல மாதங்களாக தொடர்பில் இருந்ததால் அவர்களது நம்பிக்கையை பெற முடிந்தது. ஏன் அவர்கள் குழந்தைகளை பள்ளி களுக்கு அனுப்பு வதில்லை என்பதை புரிந்து கொள்ளவும் முடிந்தது. அவர்கள் பண கஷ்டத்தில் இருந் தார்கள். அதனால் குழந் தைகள் படிப்புக்கு தேவையான எழுது பொருட்களை வாங்கி கொடுத்தேன். ஆரம்பத்தில் ஒருசிலர் தான் தங்கள் குழந்தை களை பள்ளிக்கூடம் அனுப்ப முன்வந்தார்கள். அவர்கள் ஒழுங்காக வந்து நன்றாக படித்ததும் தங்கள் பிள்ளை களையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தொடங்கினார்கள். பின்னர் சிறுவர்களை அடிமைப்படுத்திய பழக்கவழங்களுக்கு எதிராக விழிப்புணர்வை விதைத்தேன். அதைத்தொடர்ந்து அவர்களிடம் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிறுவர்களை விட சிறுமிகள்தான் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை இருக்கிறது. பெண் குழந்தைகள் படிப்பதை அவர்களுடைய குடும்பத்தினரும் விரும்பு வதில் லை. அவர்களிடம் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி 10-ம் வகுப்பு தேர்வுகளை தனியார் தேர்வு மையம் மூலம் எழுதுவ தற்கு உதவினேன். இப்போது நிறைய பெண்கள் கல்லூரி படிப்பையும் தொடர்ந்து கொண்டி ருக்கிறார்கள்’’ என்கிறார்.

குழந்தைகள் தொடக்க கல்வி கற்பதற்காக பால்வடி மையம் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார், குமுத் மிஸ்ரா. இவரது முயற்சியால் இப்போது 200-க்கும் மேற்பட்ட குழந்தை கள் பள்ளி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் குமுத் மிஸ்ராவின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட இரண்டு பெண்கள் ஏழைக் குழந்தைகளுக்காக அந்த பகுதியில் மழலை பள்ளி ஒன்றையும் தொடங்கி நடத்திவருகிறார்கள். 

மேலும் செய்திகள்