திராட்சை சுற்றுலா பூங்கா
தென்மேற்கு பருவக்காற்று தேனி பக்கம் வீசும்போது இன்பச் சாரலாக உருவெடுக்கிறது. இது இயற்கை கொடுத்த பெருங்கொடை.
மலை வளமும், மண் வளமும் நிறைந்திருக்கும் இங்கு விளையாத பயிர்களே இல்லை. வளம்கொண்ட இந்த பகுதியில் குறிப்பிடத்தக்கது, கம்பம் பள்ளத்தாக்கு. தேனி மாவட்டத்தில் லோயர்கேம்ப்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை உள்ள பகுதி கம்பம் பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது. கிழக்கே வருசநாடு மலைக் குன்றுகள், தெற்கே சுருளி மலை, மேற்கே கேரளத்து ஏலமலை போன்றவைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு பகுதி இது.
கம்பம் பள்ளத்தாக்கில் சுமார் 3,500 ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி நடக்கிறது. இந்திய அளவில் திராட்சை உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் திராட்சை உற்பத்தியில் தேனி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதில் சிறப்புமிகுந்த இன்னொரு விஷயம் என்னவென்றால், மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு ஒருமுறை தான் திராட்சை விளையும். ஆனால், இங்கு 3 சீசன் மகசூல் கொடுக்கிறது. அந்த வகையில் ஆண்டு முழுவதும் பழத்தை கொடுக்கும் ‘பூலோகத்து திராட்சை அட்சய பாத்திரமாக’ கம்பம் பள்ளத்தாக்கு திகழ்கிறது. இங்குள்ள திராட்சை தோட்டங்களையும், இயற்கை காட்சிகளையும் ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் திராட்சை தோட்டங்களை பார்வையிட்டு உற்சாகமாய் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். இதற்காகவே சில திராட்சை தோட்டங்களில், கொத்துக் கொத்தாய் பழுத்துத் தொங்கும் திராட்சை பந்தலுக்கு அடியில் இருக்கைகள் அமைத்து ‘திராட்சை சுற்றுலா பூங்கா’ அமைத்திருக்கிறார்கள்.
தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் இதர கல்லூரி மாணவ-மாணவிகளும் இங்கு அதிக அளவில் வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள விவசாயிகள், கூலித்தொழிலாளர்களுடன் கலந்துரையாடி திராட்சை விவசாயத்தை பற்றியும், அது சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை பற்றியும் தெரிந்துகொள்கிறார்கள்.
நாம் திராட்சை பயிரிடும் பெண் விவசாயியை சந்திக்க சென்றபோது, அங்குள்ள தோட்டம் ஒன்றில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் குழுமியிருந்தனர். திராட்சை பயிரிடும் முறையை அவர்கள் விலாவாரியாக கேட்டறிந்து கொண்டிருந்தார்கள்.
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அதே நேரத்தில், தொழிற்சாலை களுக்கு இணையான வேலை வாய்ப்பையும் திராட்சை தோட்ட ங்கள் வழங்கி வருகின்றன. சுமார் 30 ஆயிரம் பேர் அன்றாடம் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். பெண்கள் அதிகமான அளவில் வேலை பார்க்கிறார்கள். இங்கு தித்திக்கும் கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடிதான் அதிக அளவில் நடக்கிறது. பச்சை மற்றும் ரெட்குலோப்ஸ் வகை சாகுபடி ஓரளவு நடக்கிறது.
திராட்சை பயிரிடும் பெண் விவசாயிகளில் ஒருவர், சுருளிப் பட்டி செல்வராணி. நீண்ட காலமாக திராட்சை விவசாயம் செய்யும் அவர் கூறுகிறார்:
‘‘30 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு திருமணம் ஆனது. திருமணத்துக்கு முன்பு எனக்கு திராட்சை விவசாயம் பற்றி எதுவும் தெரியாது. எனது கணவர் பொன்.காட்சிக்கண்ணனின் குடும்பத்தினர் திராட்சை விவசாயம் செய்து வந்தனர். திருமணத்துக்கு பிறகு நானும் கணவரோடு இணைந்து திராட்சை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் மகள்கள் வைஷாலி, ஷிவானி இருவரும் டாக்டர்கள். மகன் நிக்ஷை டாக்டருக்கு படித்துக்கொண்டிருக்கிறான்.
இந்திய அளவில் திராட்சை சாகுபடியில் தேனி மாவட்டம் தவிர்க்க முடியாத பகுதியாகி விட்டது. திராட்சையை நாங்கள் தெய்வமாக வணங்குகிறோம். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது திராட்சை தோட்டம் அருகில் பொங்கல் வைத்து திராட்சை கொடியை வணங்கி நன்றி தெரிவிப்போம்.
செடியாக வாங்கியே பெரும்பாலும் திராட்சை நடவு செய்யப்படுகிறது. இதற்கு பதியம் வைத்து செடிகள் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே விளைச்சல் அடைந்த திராட்சை பந்தலில் இருந்து குச்சிகளை பதியம் வைத்து கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. கன்றுகள் நடவு செய்யப்பட்ட பிறகு பந்தல் அமைக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு கற்கள் நட்டு பந்தல் அமைக்க ரூ.2 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை செலவு ஆகிறது. 6 மாதங்கள் கன்று வளர்ந்த பிறகு அதில் ஒட்டு கட்டப்படுகிறது. நன்கு விளைச்சல் உள்ள பந்தலில் இருந்து குச்சிகளை வெட்டி, வளர்ந்த கன்றுகளோடு ஒட்டு கட்டப்படும். 16 மாதங்களில் பந்தலில் கொடி நன்கு படர்ந்து விடும்.
பின்னர் துளிர்விடும் இலைகளில் பொய் இலைகளில் பூ உருவாகாது. அதனால் அவைகளை கிள்ளி நீக்கிவிடுவோம். அதன்பிறகு கொடியில் பூக்கத் தொடங்கிவிட்டால், நுனிப்பகுதி கிள்ளி விடப்படும். இதன் மூலம் இலைகளுக்கு மண், நீர் சத்துகள் செல்வது குறைந்து பூக்களுக்கு சத்துக்கள் அதிகம் சேரும். நன்கு பிஞ்சு பிடித்து விளைந்து வரும் நிலையில் நஞ்சு எடுக்கப்படும். நஞ்சு எடுத்தல் என்பது, பழங்கள் நன்கு ஒரே சீராய் விளைச்சல் அடைய வேண்டும் என்பதற்காக பிஞ்சுகளில் இடையிடையே இருக்கும் விளைச்சல் அடையாதவைகளை நீக்குவது ஆகும். பின்பு அவை சீராக பழுக்க பல நிலைகளில் மருந்து தெளிக்கப்படுகிறது. கவாத்து செய்த 4 மாதங்களில் பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது.
திராட்சை தோட்டங்களில் ஒருபுறம் கவாத்து செய்தல், மற்றொரு புறம் பிஞ்சு இறக்குதல், இன்னொரு பகுதியில் பழங்கள் அறுவடை என ஆண்டு முழுவதும் பழங்கள் கிடைக்கும் வகையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுழற்சி முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. முதற்கட்ட செலவுகளை தவிர்த்து ஒவ்வொரு முறை மகசூல் எடுக்கவும் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு சுமார் 5 டன் விளைச்சல் கிடைக்கும். ஆண்டுக்கு 3 சீசன் விளைச்சல் எடுக்கும் நிலையில் ஒரு சீசனில் மட்டுமே நல்ல விலை கிடைக்கிறது. மராட்டிய மாநிலத்தில் இருந்து பழங்கள் வரத் தொடங்கி விட்டால் கம்பம் பள்ளத்தாக்கில் விளைகின்ற திராட்சையை ஒரு கிலோ ரூ.15-க்கு கூட விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுவது கிடையாது. ஆண்டு முழுவதும் திராட்சை உற்பத்தி செய்தாலும் அதை சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ளது. விவசாயி களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கம்பம் அருகே சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் திராட்சையில் இருந்து ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, ரெட் ஒயின் தயாரிக்கப்படுகிறது. அதை டாஸ்மாக் நிறு வனம் மொத்தமாக கொள்முதல் செய்கிறது.
கம்பம் பள்ளத்தாக்கில் விளையும் திராட்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. கேரள மக்கள் இந்த பழங்களை அதிகம் விரும்பி சாப்பிட்டு வந்தனர். திராட்சை சாகுபடிக்கு அதிக அளவில் ரசாயன உரம் பயன் படுத்தப்படுவதாகவும், தடை செய்யப்பட்ட மருந்துகள் பயன்படுத்தப்ப டுவதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய வதந்தியை தொடர்ந்து கேரளாவில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச் செல்வது குறைந்து விட்டது. ஆனால், தடை செய்யப்பட்ட மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துவது இல்லை என்றும், இந்த பழங்களால் பாதிப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து தெரிவித்த பிறகும் மீண்டும் முன்பு போல் விற்பனையாவதில்லை’’ என்கிறார், செல்வராணி.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சையில் இருந்து பழச்சாறு தயாரித்தல், உலர் திராட்சையாக விற்பனை செய்தல் போன்றவை குறைந்த அளவில் நடைபெறுகிறது. இங்கு திராட்சை விவசாயம் நன்றாக லாபகரமாக நடைபெற திராட்சையை ஏலம் விடும் மையம், சேமிக்க குளிர்பதன கிட்டங்கி மற்றும் நேரடி கொள்முதல் மையம் போன்றவைகளை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
மருத்துவ குணம்
திராட்சையில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி, உத்தமபாளையம் அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் சித்த மருத்துவர் சுவாமிநாதன் சொல்கிறார்:
‘‘திராட்சையில் பலவகைகள் இருந்தாலும் கருப்பு திராட்சையில்தான் அதிக மருத்துவ குணம் உள்ளது. கருநீலம், கருஞ்சிவப்பு ஆகிய இரண்டு ரகத்திலும் ‘ஆந்தோசயானின்’, ‘பாலி பீனால்’ ஆகிய வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவை புற்றுநோய் வராமல் பாதுகாக்கும். புற்றுநோய் வந்தால் அதன் தீவிரத்தை குறைக்கும். திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்தும், ப்ரூக்டோஸ் எனும் பழச் சர்க்கரையும் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் இதை உண்ணலாம். நீரில் ஊற வைத்த உலர் திராட்சை பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். இதில் இருக்கும் ‘ப்ரூக்டோஸ்’ சாப்பிட்ட உடன் உற்சாகத்தை வழங்கும்.
திராட்சையை சர்க்கரை நோயாளிகள் நிறைய சாப்பிடலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அது தவறு. சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவு மட்டும் உண்ணலாம். இதில் வைட்டமின்-சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அதிகமாக சாப்பிட்டால் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். பழத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்தே அதற்கு காரணம்.
பொட்டாசியம் சத்தும் உள்ளதால் இருதய நோயாளிகள் இதை உண்ணலாம். வெயில் காலங்களில் வியர்வை இழப்பால் உண்டாகும் நீர்ச்சத்து குறைபாட்டை இது போக்கி, உற்சாகம் தரும். முகப்பரு வராமல் இருக்கவும், உடல்சூடு குறையவும், தோல் நோய்கள் குறையவும் திராட்சை பழத்தை சாப்பிடலாம். திராட்சையில் இருக்கும் ‘ரெஸ்வெராட்ரால்’ எனும் சத்து, நோய்க்கான தடுப்பு மருந்துபோல் செயல்படுகிறது. இது கணைய புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, வயிற்று புற்றுநோய் போன்றவைகளின் பாதிப்பை குறைக்கும்.
திராட்சை விதையில் பெருமளவு கால்சிய சத்து உள்ளது. கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு நோய்களுக்கு இது நல்ல மருந்து. திராட்சையில் இருந்து தயார் செய்யப்படும் ‘ரெட் ஒயின்’ இதயத்துக்கு நல்லது. சித்த மருத்துவத்தில் திராட்சை கலந்த மருந்துகள் தயார் செய்யப்படுகின்றன’’ என்றார்.
ஆராய்ச்சி நிலையம்
உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டி என்ற இடத்தில், திராட்சை ஆராய்ச்சி நிலையம் இயங்கிவருகிறது. இங்கு 130 வகையிலான ஏற்றுமதி தரம் வாய்ந்த திராட்சை கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பழச்சாறு உற்பத்தி ரகம், உலர் திராட்சைக்கான உற்பத்தி ரகம், ஒயின் உற்பத்திக்கு உகந்த ரகம் போன்று புதிய வகைகள் உருவாக்கப்பட்டு, கன்றுகளை வளர்த்து விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். கல்தூண்கள் நட்டு திராட்சை பந்தல் அமைக்கப்பட்ட நிலையை மாற்றி, தற்போது ஆங்கில எழுத்தான ‘Y’ வடிவில் பந்தல்அமைத்து பரிசோதனை முறையில் திராட்சை சாகுபடி செய்கிறார்கள். இதன் மூலம் பராமரிப்பு செலவு குறையும் என்றும், மகசூல் அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். திராட்சை ஆராய்ச்சி நிலையம் மூலமாக விவசாயிகளை மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று திராட்சை சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து நேரடி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து திராட்சை ஆராய்ச்சி நிலையத்திலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.