சிப்காட் தொழிற்பேட்டையில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-07-21 22:33 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான ரசாயான தொழிற்சாலை உள்ளது. இங்கு ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி ஆகியவை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

நேற்று இந்த தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தொட்டியில் வைக்கப்பட்டு இருந்த ரசாயான கலவை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜோதி பிரகாசம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிப்காட் தீயணைப்பு அதிகாரி ஜெயச்சந்திரன் தலைமையில் தீயை அணைத்தனர்.

தீ விபத்து நடந்த ரசாயான தொழிற்சாலை அருகே சிலிண்டர்களில் சமையல் எரிவாயு நிரப்பும் 2 தொழிற்சாலைகள் மற்றும் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளன. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

அதேபோல கும்மிடிப்பூண்டி பைாஸ் சாலையையொட்டி உள்ள வாகன கட்டுமானத்தொழிற்சாலையின் பின்புறம் உள்ள செடி கொடிகள் மற்றும் புதர் மண்டிக்கிடந்த பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியிலும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

இதனால் வாகன கட்டுமான தொழிற்சாலைக்குள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த 2 தீ விபத்துகள் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்