மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? பிரதமர் மோடிக்கு, நடிகை ரம்யா கேள்வி

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? என்று பிரதமர் மோடிக்கு நடிகை ரம்யா கேள்வி எழுப்பியுள

Update: 2018-07-21 23:00 GMT

பெங்களூரு, 

மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? என்று பிரதமர் மோடிக்கு நடிகை ரம்யா கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகை ரம்யா

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு மீது நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், பா.ஜனதா கூட்டணி அரசு வெற்றி பெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு பேசிய ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். குறிப்பாக என்னை நேருக்கு நேர் பார்க்க பிரதமரால் முடியவில்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்விகளை கேட்டும், மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறியும் நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தளப்பிரிவின் தலைவருமான ரம்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு உள்ளார். நடிகை ரம்யா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:–

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?

மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டம் என்ன ஆனது?, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக கூறினீர்களே?, வேலை வாய்ப்பு எங்கே?, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? நிறைவேற்றப்படாதா?, என்று தெரியவில்லை. மத்திய பா.ஜனதா அரசால் விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

பா.ஜனதா, ஆட்சிக்கு வந்த பின்பு பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக மாற்றி விட்டது. ஆனால் ஏழைகளாக இருந்தவர்கள், அதைவிட இன்னும் ஏழைகளாக மாறி உள்ளனர். இதுவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனையாகும்.

இவ்வாறு நடிகை ரம்யா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்