லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி பெண் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் நேற்று தனது கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் பெரம்பலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார்.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் நேற்று தனது கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் பெரம்பலூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அதில், எங்கள் கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை தனியார் நிதி நிறுவனங்களின் முகவர் என்று கூறிக்கொண்டு என்னிடமும், எங்கள் கிராமத்தை சேர்ந்த சில பேரிடமும், அவர் மாத தவணையாக 63 மாதங்கள் பணம் கட்டினால், முடிவில் கட்டிய பணத்தை இரு மடங்காகவும், பணம் கட்டும் போது இறந்து விட்டால் பணம் கட்ட தேவையில்லை என்றும், அந்த பணம் இறந்தவரின் வாரிசுகளுக்கு கொடுக்கப்படும் என்றும் ஆசை வார்த்தைகள் கூறி எங்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தார். ஆனால் நாங்கள் முழுத்தவணையாக பணம் கட்டி முடித்த பிறகும், அந்த இருமடங்கு பணத்தை அந்த பெண் எங்களுக்கு தரவில்லை. கட்டிய பணத்தை திருப்பி அவரிடம் கேட்டால், அவர் தராமல் இழுத்தடித்து மோசடி செய்து வருகிறார். எனவே அந்த பெண் மீது நடவடிக்கை எடுத்து, அவரிடம் இருந்து எங்கள் பணத்தை வாங்கி தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.