கோட்டக்குப்பம் அருகே பயங்கரம்: ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை
கோட்டக்குப்பம் அருகே வெடிகுண்டு வீசியதில் தப்பியதால், ரியல் எஸ்டேட் அதிபரை ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. ரவுடிகள் கும்பல் மோதலில் இந்த பயங்கர சம்பவம் நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே குயிலாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது 42), ரியல் எஸ்டேட் அதிபர். மேலும் தங்கும் விடுதியும் நடத்தி வந்தார். நேற்று மாலை பாபு, மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
குயிலாப்பாளையம் அய்யனார்கோவில் அருகே வந்தபோது பின்னால் வேகமாக வந்த ஒரு கார், அவருடைய மோட்டார் சைக்கிளை முந்திச்சென்று வழிமறித்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற பாபு நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த காரில் இருந்து திபுதிபுவென்று 4 பேர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கியதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்தியது. அப்போது ஒரு ஆசாமி திடீரென்று நாட்டு வெடிகுண்டை எடுத்து பாபுவை நோக்கி வீசினார். அவருக்கு அருகில் விழுந்து அந்த வெடிகுண்டு வெடித்தது. இதனால் பாபு தொடர்ந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் அவரை விரட்டிச் சென்று பாபுவை வெட்டினர். அவரது கழுத்தில் வெட்டு விழுந்து அவர் நிலை குலைந்து சரிந்து விழுந்தார். தொடர்ந்து அந்த கும்பல் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் பாபு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
இதன்பின் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து பாபுவின் உறவினர்கள் அங்கு வந்து அவருடைய உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்த பயங்கர கொலை காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த கடைகள் அடைக்கப்பட்டன.
இதுபற்றி தகவல் அறிந்து கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் செல்வராஜ், எழிலரசி, திருமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த அவருடைய உறவினர்களும், நண்பர்களும் கோதண்டராமன் உடலை எடுக்கவிடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாபுவை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களை சமாதானம் செய்து பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குயிலாப்பாளையத்தில் ராஜ்குமார் கும்பல் மற்றும் மணிகண்டன் கும்பல் என 2 ரவுடிக்கும்பல் செயல்பட்டு வருகிறது. இதில் பாபு ரவுடி ராஜ்குமார் தரப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த ரவுடிக்கும்பலுக்கு இடையே நடந்து வரும் மோதல் காரணமாக இந்த பயங்கர கொலை நடந்ததா? அல்லது ரியல் எஸ்டேட் தொழில்போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? வேறு காரணமா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பாபுவுக்கு வளர்மதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.