குளச்சல் அருகே அண்ணன்– தம்பி வீடுகளில் கதவை உடைத்து பொருட்கள் கொள்ளை
குளச்சல் அருகே அண்ணன்– தம்பி வீடுகளில் கதவை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
குளச்சல்,
குளச்சல் அருகே உள்ள உடையார்விளை, வேப்பவிளையை சேர்ந்தவர் விஜயன். இவரது தம்பி தினேஷ். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் தனித்தனியாக வீடு கட்டியுள்ளனர். தற்போது, அண்ணன், தம்பி இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள். இதனால், விஜயனின் வீட்டில் அவரது மனைவி ஆனந்தியும், தினேசின் வீட்டில் அவரது மனைவி அகிலாவும் தங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆனந்தியும், அகிலாவும் அவரவர் தாய் வீடுகளுக்கு சென்றனர். இதனால், இரண்டு வீடுகளும் பூட்டப்பட்டு இருந்தன.
இந்தநிலையில், நேற்று காலையில் ஆனந்தி தனது வீட்டுக்கு சென்றார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், வீட்டில் இருந்த டி.வி., டி.வி.டி. பிளேயர், விலைஉயர்ந்த செல்போன் ஆகியவற்றை காணவில்லை.
வீட்டின் பின்பகுதிக்கு சென்ற போது, அங்கு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து டி.வி., செல்போன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுபோல், பக்கத்தில் உள்ள தினேஷ் வீட்டிலும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து தினேசின் மனைவி அகிலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்வையிட்ட போது, வீட்டில் இருந்த டி.வி., டி.வி.டி.பிளேயர் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
விஜயனின் வீட்டில் கொள்ளையடித்த கும்பல்தான், தினேஷ் வீட்டிலும் பொருட்களை திருடி சென்றுள்ளது. இரண்டு வீடுகளில் பணம், நகை இல்லாததால் மர்ம நபர்கள் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. சம்பவ இடத்தில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன்–தம்பி வீடுகளில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.