கடலூர் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர் துறைமுகத்தில் நேற்று மாலை 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.
கடலூர்முதுநகர்,
மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. ஒடிசா மாநிலம் பாரிசோர்க்கு கிழக்கு, தென் கிழக்கே சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் வங்ககடலில் தாழ்வு மண்டலமாக மையம் கொண்டு உள்ளது. இது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று மாலை கடலூர் துறைமுகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்ட வானிலையில் எந்தவித மாற்றமும் இருக்காது என வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.