முதியவர்களுக்கு கைகொடுக்கும் புதுமை ஆடை!

முதியவர்களுக்குக் கைகொடுக்கும் ஒரு புதுமை ஆடையை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

Update: 2018-07-21 10:42 GMT
தினமும் நடக்கும் தூரத்தை அளவிட ஸ்மார்ட் வாட்ச் அணிவதில் தொடங்கி, வங்கிக் கணக்கு தகவல்களைத் தெரிந்துகொள்வது வரை, வேரபிள் டெக்னாலஜி எனப்படும் அணியும்சாதன தொழில்நுட்பம் நமக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.

நமது உடலில் அணியக்கூடிய மின் சாதனங்கள் நமக்கு தனிப்பட்ட பலன்களை மட்டும் தராமல், பெரிய அளவிலான சமூக பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவுகின்றன. உதாரணமாக முதியவர்களுக்கு உதவும் விஷயத்தில்.

உலகெங்கும் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் சமூக மாற்றங்களில் ஒன்றாக முதியோர் எண்ணிக்கை உயர்வை ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது.

60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடை யவர்கள் எண்ணிக்கை வருகிற 2050-ம் ஆண்டுவாக்கில் தற்போதுள் ளதை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகிவிடும் என்று கூறுகிறது அந்த அறிக்கை.

இதனால் ஏற்படக்கூடிய பிரச்சினை களில், இடம் விட்டு இடம் நகர்தலும் ஒன்று. அதாவது ஒருவருக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க இடப்பெயர்வும் கடினமான ஒன்றாகிவிடும். வீடு, பொதுஇடங்கள், அலுவலகம் என எல்லா இடங்களிலும் கஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

இதற்கு புது வகையான அணியும் சாதன தொழில்நுட்பம் உதவிக்கு வர உள்ளது. முதியோர்களுக்கு என்றே எடை குறைவான, எளிதில் அணியக்கூடிய ஒரு சிறப்பு ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.ஐ. இன்டர்நேஷனல் என்ற லாபநோக்கமற்ற நிறுவனத் தின் உதவியுடன் இயங்கும் சீஸ்மிக் என்ற நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. அணிபவர் களின் உடலுடன் ஒட்டியபடி உள்ள இந்த ஆடை, அவர்களின் சக்தியையும் அதிகரிக்கிறது.

இந்த ஆடையில் உள்ள ‘மின்சார தசைகள்’, சின்னஞ்சிறு மோட்டார் களால் இயக்கப்படுகின்றன. மனித உடல் தசை எப்படி வேலைசெய் கிறதோ அதே போல் இந்த ‘மின்சார தசையும்’ இயங்குகிறது.

உடலின் மூட்டுப்பகுதிகளில் உள்ள துணியுடன் ‘மின்சார தசைகள்’ ஒருங்கிணைந்துள்ளன. துணியிலுள்ள பிடிமான தளத்தால் இது சாத்தியமாகிறது. நமது உடலுக்குள் உள்ள எலும்பும் தசையும் எப்படி ஒட்டி செயல்படுகின்றனவோ அதுபோல இது செயல்படுகிறது.

உடலின் அசைவுகளை கண் காணிக்கும் கணினியும் அதற்கான சென்சாரும் இந்த ஆடையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

‘மின்சார தசைகள்’ எப்போது இயங்க வேண்டும் என அதனுடன் உள்ள மென்பொருள் உத்தரவிடும். இந்த செயல்பாட்டுக்குத் தேவையான மோட்டார், மின்கலன், மின்சுற்றுப் பலகைகள் போன்றவை அறுகோண வடிவில் உடலில் பொருத்த தோதான ஒரு சிறிய பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்.

நடக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு கம்பும் வாக்கர்க ளும்தான் தற்போது உதவி வருகின்றன. சக்கர நாற்காலிகள் கூட இது போன் றவர்களுக்கு உதவுகின்றன. ஆனால் நகரும் தன்மை சற்றே குறைவாக உள்ள முதியவர்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த மின்சார ஆடை.

இந்த ஆடை அணிய கச்சிதமாக இருப்பதுடன், சிக்கலில்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்காக வடிவமைப்பாளர் யிவிஸ் பெஹரின் உதவியைப் பெற்றது சீஸ்மிக்.

ஓர் ஆடை என்றால் அணிவதற்கு விருப்பமாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்கிறார் பெஹர். அணிய வசதியாக இருப்பதுடன் அழகான தோற்றமும் உள்ளதாக இருக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.

மின்சாரத்தால் இயங்கக்கூடிய இந்த ஆடையை இவ்வாண்டு இறுதியில் ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்தில் சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது சீஸ்மிக்.

‘எதிர்காலம் இங்கே ஆரம்பம்’ என்ற பெயரிலான ஒரு கண்காட்சி லண்டனின் விக்டோரியாவிலும் ஆல்பர்ட் அருங் காட்சிய கத்திலும் நடைபெற்றது. அதில் இடம்பெற்றிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் இந்த மின்சார ஆடையும் ஒன்று.

வயதாக வயதாக தசைகளின் வலிமை குறைவது நம் அனைவரையும் பாதிக்கிறது. 60 வயதை எட்டினாலே தசைகளின் உந்துசக்தி வெகுவாகக் குறைந்து விடுகிறது. உதாரணமாக ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவில் குறையும் இத்திறன், 70 வயதில் 2 சதவீதம் என்ற அளவை எட்டுகிறது என்றால் 80 வயதில் 4 சதவீதத்தை எட்டுகிறது.

தொழில்நுட்ப அணியும் சாதனங்களுக் கான சந்தை முதியவர்களுக்கு மட்டுமானது என்பதைத் தாண்டி பரவலானதாக உள்ளது.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மஸ்குலர் டிஸ்ட்ரபி என்ற தசைநார் தேய்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கும் மின்சார ஆடைகள் உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பணியிடப் பாதுகாப்பு, தொழிற்சாலை பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில், உதாரணமாக கட்டுமானத் தொழிலாளர்கள், கிடங்குகளில் பணிபுரிவோர் தேவைக்கேற்பவும் அணியும் சாதனங்கள் உருவாக்கவும் முயற்சி நடந்து வருகிறது.

ஒரு வடிவமைப்பாளர் என்ற முறையில் இந்தத் தொழில்நுட்பங்கள் மனிதனுக்கு மேம்பட்ட வாழ்க்கையைத் தர வேண்டும் என்பதுதான் தமது இலக்கு என்கிறார் பெஹர்.

அணியும் சாதன தொழில்நுட்பங்கள் தற்போது தொடக்கநிலையில் இருப்ப தாகக் கூறுகிறார் பெஹர்.

பத்தாண்டுகளுக்கு முன், கைக்கட்டை விரலில் அணியக்கூடிய மின்கலன் அற்ற அணியும் சாதனங்கள் இருந்தன என்று கூறும் பெஹர், இப்போது அல்ட்ரா வயலட் தொழில் நுட்பங்கள் வந்துவிட்டதாகக் கூறுகிறார். அடுத்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பங்கள் கண்ணுக்கு தெரியாமல் செயல்படும் வகையில் மாறிவிடும் என்று அவர் சொல்கிறார்.

அணியும் சாதன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி எந்த திசையில் பயணிக்கும் என்பதை இப்போதே கணிப்பது கடினம்.

ஆனால் அந்த வளர்ச்சி, தொழிற் சாலைகளின் பிரச்சினைகளில் இருந்து உலகின் மற்ற பிரச்சினைகள் பலவற் றுக்கும் தீர்வு வழங்கும் என நம்பலாம்.

தொழில்நுட்பம் வளர வளர, மனிதர்களுக்கு உதவும் வசதிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

அந்த வகையில் இந்தப் புதுமை ஆடை, முதியவர்களுக்கு பெரும் நிம்மதி கொடுக்கும் என்று நம்பலாம்.

மேலும் செய்திகள்