தலைஞாயிறு, கீழையூர் ஒன்றியங்களில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு

தலைஞாயிறு, கீழையூர் ஒன்றியங்களில் பொதுப்பணித்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-07-20 22:00 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் தொழுதூர் வடக்கில் குடிமராமத்து பணிகளின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தொழுதூர் வாய்க்கால் மதகு சீரமைக்கும் பணிகளையும், மாராச்சேரி கிராமம் கோடிவிநாயநல்லூர் வாய்க்காலில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக மேலாளர் ஜெகநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து அருந்தவம்புலம் கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மல்லியனாறு வடிகால் இடதுகரையில் மதகு சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைதொடர்ந்து கீழையூர் ஒன்றியம் சிகார் கிராமம் அண்டக்குடி வாய்க்காலில் ரூ.1.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், மேலநாகலூர் கிராமம் நாகலூர் வாய்க்காலில் ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும், எட்டுக்குடி கிராமம் வடக்கு காட்டாறு எட்டுக்குடி கிளை வாய்க்காலில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தங்கமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்