மாதவரத்தில் ஆன்லைன் மூலம் விபசாரம்; பெண்கள் உள்பட 8 பேர் கைது
மாதவரத்தில் ஆன்லைன் மூலம் விபசாரம் நடத்திய தாக பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகர் 1-வது தெருவில் ராகி (வயது 30) என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இவருடன் சென்னை திருமங்கலம் பாடி புதுநகரை சேர்ந்த மோசஸ் (28), கோவையை சேர்ந்த சங்கர் (28) ஆகியோர் விபசார புரோக்கர்கள் மூலம் ஆன்லைன் மூலம் பெண்களை அழைத்து வந்து விபசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அரிபிரசாத் (35) என்பவர் ஆன்லைன் மூலம் பார்த்து தணிகாசலம் நகருக்கு வந்து நேற்று முன்தினம் ராகியிடம் விசாரித்துள்ளார். அப்போது ராகிக்கும், அரிபிரசாத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ராகியின் நண்பர்கள் மோசஸ், சங்கர் ஆகியோர் அரிபிரசாத் வைத்திருந்த பணத்தை பிடுங்கிக் கொண்டு அவரை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
8 பேர் கைது
இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மாதவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மாதவரம் போலீசார் விரைந்து வந்து அந்த வீட்டை சோதனை செய்தனர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது தெரியவந்தது.
இது குறித்து மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபசார புரோக்கர்கள் மோசஸ், சங்கர், ராகி மற்றும் 4 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். விபசார தரகர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.