கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 785 பேர் கைது
புதுக்கோட்டையில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற 3 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 785 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து, தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தும், வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும் வருகிறார். அவரது ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக கவர்னர் பங்கேற்க செல்லும் மாவட்டங்களில் தி.மு.க.வினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கவர்னருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் கவர்னர் அடக்குமுறையை கையாள்வதாகவும், மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று புதுக்கோட்டையில் தூய்மை மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே, கவர்னருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க.வினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து அந்த பகுதியை சுற்றிலும் போலீசார் தடுப்புகளை அமைத்தனர். மேலும் அங்கு தீவிர பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் கவர்னர், தூய்மை பணிகளை ஆய்வு செய்து முடித்ததும், மற்ற பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கிருந்து புறப்பட தயாராக இருந்தார். இதற்கிடையே புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே திரண்டு இருந்த தி.மு.க.வினர், கவர்னருக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக போலீசாரின் தடுப்புகளை மீறி சாலைக்கு வர முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து கருப்பு கொடி காட்ட திரண்டு இருந்த தி.மு.க.வினரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ரகுபதி, மெய்யநாதன், பெரியண்ணன் அரசு, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செங்கோடன் மற்றும் 55 பெண்கள் உள்பட 785 பேரை போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதன் பின்னர் கவர்னர் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஆய்வுக்கு சென்றார். இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.