வி.கைகாட்டி அருகே புதிய வழிதடத்தில் அரசு பஸ் இயக்கம்

அரியலூர் மாவட்டம், அரசு பஸ் இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், போக்குவரத்துத்துறை கிளை அலுவலகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

Update: 2018-07-20 22:15 GMT
வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள தேளூர், குடிசல், காத்தான்குடிகாடு கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அரியலூரிலிருந்து, தங்களது கிராமங்கள் வழியாக இரும்புலிக்குறிச்சி சென்று திரும்பும் வகையில் அரசு பஸ் இயக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், போக்குவரத்துத்துறை கிளை அலுவலகத்துக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து, அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் அரியலூரிலிருந்து மேற்கண்ட கிராமங்களின் வழியாக இரும்புலிக்குறிச்சி சென்று திரும்பும் வகையில் நாள் ஒன்றுக்கு 3 முறை சென்று வரும் விதமாக புதிய வழிதடத்தில் அரசு பஸ் பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், காத்தான்குடிகாடு அ.தி.மு.க. கிளை கழக செயலாளர் சங்கர் முன்னிலையில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டு புதிய வழிதடத்தில் இயக்கப்பட்ட பஸ்சை வரவேற்றனர். தொடர்ந்து, பஸ்சில் பயணித்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்