கைக்கடிகாரத்தில் மறைத்து பயணி கடத்தி வந்த ரூ.5¼ லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் கைக்கடிகாரத்தில் மறைத்து பயணி கடத்தி வந்த ரூ.5¼ லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-07-20 22:30 GMT
செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணி, கைக்கடிகாரத்தில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், இளையான்குடியை சேர்ந்த சிக்கந்தர் என்பதும், 176 கிராம் எடையுள்ள தங்கத்தை தகடுகளாக செய்து அதை அவர் கைக் கடிகாரத்தில் மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.5 லட்சத்து 27 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்