தூத்துக்குடியில் ஒய்.எம்.சி.ஏ. தென்பிராந்திய மாநாடு கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் ஒய்.எம்.சி.ஏ. தென்பிராந்திய மாநாட்டை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

Update: 2018-07-20 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் ஒய்.எம்.சி.ஏ. தென்பிராந்திய மாநாட்டை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

தென்பிராந்திய மாநாடு

அகில இந்திய ஒய்.எம்.சி.ஏ. தென்பிராந்திய மாநாடு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு ஒய்.எம்.சி.ஏ. தென் பிராந்திய இயக்கத்தின் தலைவர் அசோகன் சாலமோன் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் லெபி பிலிப் மாத்யூ முன்னிலை வகித்தார். தூத்துக்குடி தலைவர் டி.துரைராஜ் வரவேற்று பேசினார். ஜெ.ஏ.டி.ஜெபச்சந்திரன் ஆசி வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜெயநேசகுமார், தூத்துக்குடி வ.உ.சி. கல்வி குழுமத்தின் அறங்காவலர் ஏ.பி.சி.வீ.சண்முகம், சாயர்புரம் ஆலயமணி, தூத்துக்குடி ஒய்.எம்.சி.ஏ. கவுரவ செயலாளர் ஆரோன், பொருளாளர் விக்டர் தங்கதுரை ஆகியோர் பேசினர்.

நிர்வாகிகள் தேர்வு

தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ. தென்பிராந்திய இயக்கத்தின் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டேன்லி வேதமாணிக்கம், தென்பிராந்திய ஒய்.எம்.சி.ஏ. தலைவராகவும், தஞ்சாவூர் அருள் குணசேகர், விருதுநகர் பால்ராஜ் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், கன்னியாகுமரி ஜோஸ் ராபிவில்சன் பொருளாளராகவும், காரைக்குடி ஸ்டெல்லா ராணி பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தென்பிராந்திய புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டேன்லி வேதமாணிக்கத்துக்கு அனைத்து நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

மண்டல செயலாளர் பால்சன் தாமஸ் நன்றி கூறினார். மாநாடு ஏற்பாடுகளை தூத்துக்குடி ஒய்.எம்.சி.ஏ. தலைவர் டி.எஸ்.எப். துரைராஜ், செயலாளர் ஆரோன், சார்லஸ் சுந்தர்சிங், பேராசிரியர் ஜான் பிரின்ஸ் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்