போலீஸ்காரரின் மனைவியுடன் கையும், களவுமாக சிக்கிக் கொண்ட சப்–இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் கள்ளத்தொடர்பு அம்பலம்
பல்லாரியில், சிகரெட் புகைத்துவிட்டு நெருப்பை அணைக்காததால் தீப்பிடித்தது. இதனால் போலீஸ்காரரின் மனைவியுடன் சப்–இன்ஸ்பெக்டர் கையும், களவுமாக சிக்கிக் கொண்டார்.
பெங்களூரு,
பல்லாரியில், சிகரெட் புகைத்துவிட்டு நெருப்பை அணைக்காததால் தீப்பிடித்தது. இதனால் போலீஸ்காரரின் மனைவியுடன் சப்–இன்ஸ்பெக்டர் கையும், களவுமாக சிக்கிக் கொண்டார். குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் அவர்களின் கள்ளத்தொடர்பு அம்பலமானது.
கள்ளத்தொடர்புபல்லாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை பிரிவில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் கிரண் சாம்ராட். இவர், பல்லாரி டவுன் காந்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் பல்லாரியில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் ஒருவர் தனது மனைவியுடன் வசிக்கிறார்.
இந்த நிலையில், சப்–இன்ஸ்பெக்டர் கிரணுக்கும், போலீஸ்காரரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ்காரர் பணிக்கு சென்ற பின்பு, அவரது மனைவியுடன் கிரண் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. கிரணுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
குடியிருப்பில் தீப்பிடித்ததுஇதனால் போலீஸ்காரர் மனைவியை தனது வீட்டிற்கு கிரண் அழைத்து வந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் சப்–இன்ஸ்பெக்டர் கிரண் வசித்து வரும் வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென எரிந்து குடியிருப்பில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவியது. இதனால் அங்கு வசிப்பவர்கள் ஓடிவந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் சப்–இன்ஸ்பெக்டர் கிரண் வீட்டில் போலீஸ்காரர் மனைவி இருப்பதை கண்டு, குடியிருப்பில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடியிருப்பில் தீப்பிடித்து எரிந்ததால் அவர்கள் 2 பேரும் கையும், களவுமாக சிக்கிக் கொண்டனர்.
பின்னர் குடியிருப்பில் தீப்பிடித்து எரிந்தது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தார்கள். ஆனாலும் குடியிருப்பில் உள்ள கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கிரண் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
சப்–இன்ஸ்பெக்டர் கைதுஇதுகுறத்து காந்திநகர் போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ்காரர் மனைவியுடன் தனது வீட்டில் இருந்த கிரண் சிகரெட் புகைத்து விட்டு, நெருப்பை அணைக்காமல் போட்டதால் அவரது வீட்டில் தீப்பிடித்தும், அந்த சந்தர்ப்பத்தில் கிரணும், போலீஸ்காரர் மனைவியும் சண்டை போட்டதால் அந்த தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டில் தீ விபத்து ஏற்பட காரணமாக இருந்ததாக கிரண், போலீஸ்காரர் மனைவி மீது காந்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போலீஸ்காரரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த சப்–இன்ஸ்பெக்டர் கிரண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் போலீஸ் குடியிருப்பில் தீ பிடித்ததால் கிரணுக்கும், போலீஸ்காரரின் மனைவிக்கும் உள்ள கள்ளத்தொடர்பு அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் பல்லாரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
–